உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / பூணுால் அறுப்பே நடக்கவில்லை: போலீஸ் அறிவிப்பில் குழப்பம்

பூணுால் அறுப்பே நடக்கவில்லை: போலீஸ் அறிவிப்பில் குழப்பம்

திருநெல்வேலி : திருநெல்வேலியில் பூணூல் அறுப்பு சம்பவமே நடக்க வில்லை என போலீசார்கூறியதாக வெளியானஅறிவிப்பில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.திருநெல்வேலி தியாகராஜ நகர் 13வது குறுக்குத் தெருவில் ஆஸ்திக சமாஜம் டிரஸ்ட் உள்ளது. செப்.,21 அங்கு நடந்த பஜனையில் அகிலேஷ் 24 சென்றார்.டி.வி.எஸ்., நகர் அருகே தனது பூணுாலை டூவீலரில் வந்த நான்கு பேர் அறுத்ததாகஅகிலேஷ் கூறினார். உதவி கமிஷனர்விஜயகுமார் தலைமையில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.அங்குள்ள சி.சி.டி.வி., காட்சிகளில் இதுபோன்ற சம்பவம் நடந்ததற்கான காட்சிகள் இல்லை என நேற்று போலீசார் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

போலீஸ் குழப்பம்

ஆனால் தாங்கள் அப்படி ஒரு அறிவிப்பை வெளியிடவில்லை என திருநெல்வேலி போலீசார் கூறுகின்றனர். அவர்கள் கூறியது: சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமராக்களில் பதிவு எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என தயாரித்த ஒரு செய்தி குறிப்பு, மேலிட ஒப்புதலுக்காக சென்னை டி.ஜி.பி., அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.அங்கிருந்து ஒப்புதல் வழங்கவில்லை. எனவே திருநெல்வேலி போலீசாரும் அதை வெளியிடவில்லை. ஆனால் டி.ஜிபி., அலுவலகத்தில் இருந்து அந்த செய்தி குறிப்பு வெளியே கசிந்துள்ளது என்றனர்.விசாரிக்க கால அவகாசம் எடுத்துக் கொள்ளாமல் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என போலீஸ் தரப்பில் முடிவுக்கு வந்தது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.மேலும் வெளியான செய்தி குறிப்பு உண்மையா இல்லையா என்ற குழப்பமும் நீடிக்கிறது.இந்நிலையில்அகிலேஷ் வீட்டுக்குமத்திய இணையமைச்சர் எல்.முருகன் நேற்று காலை சென்று பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்தித்தார். அவர்களின் பாதுகாப்புக்கும்,சம்பவம் குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்கவும் முயற்சிப்பதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Rajan
செப் 24, 2024 23:54

அது அறுப்பே இல்லை, பூணூல் நைந்து விட்டது, சொன்னால் புரியாது என்று சற்று இழுத்து பார்த்ததில் அறுந்து விட்டது. நண்பருக்கு இனிமேல் கெட்டியான பூணூல் அணியுமாறு அன்புடன் தட்டி அனுப்பினார்கள் கட்சி நண்பர்கள். இதையும் அரசியலாக்க ஒன்றிய அரசு முயற்சி செய்தால், அதை முறியடித்து விடுவார்கள் - மேடை முழக்கம். இப்படியும் செய்தி வரலாம்


Rajasekar Jayaraman
செப் 24, 2024 21:02

தமிழக போலிஸ் என்றைக்கு உன்மை பேசியது.


அப்பாவி
செப் 24, 2024 17:26

தின்னவேலி போல் ஒரு காமெடி பீசு.அங்கே மத்த ஜாதிக்காரங்க அடிச்சுக் கறதையே கண்டுக்க மாட்டாங்க. இந்த கேசையா கண்டுக்கப் போறாங்க?


என்றும் இந்தியன்
செப் 24, 2024 16:40

திருட்டு திராவிட மாடல் என்றால் இது தான் இந்தியா இந்துக்களுக்கு எதிராக எது நடந்தாலும் அது மறுக்கப்படும், மறைக்கப்படும், புறக்கணிக்கப்படும், திரிக்கப்படும்


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2024 15:06

ஜனநாயகம் தோற்றுவிட்டது சர்வாதிகாரம் வெற்றி பெற்றுக்கொண்டே வருகிறது , இன்று அப்பாவி அந்தணர்கள் , நாளை இந்து வன்னியர்கள் , பின்னர் நாடார்கள் நீண்டு கொண்டே போகும் , தனிமனித தாக்குதலை திராவிடர் கழகம் என்ற பெயரில் வந்தேறி மதத்தினர் நடத்துகிறார்களோ என்று ஐயம் கொள்கிறேன்


Ms Mahadevan Mahadevan
செப் 24, 2024 14:12

வெட்கம். வேதனை


Kanns
செப் 24, 2024 09:18

Since Ruling Party Home MinisterCM & DGP will Not Take Actions, Governor as Head of Executive Must Suspend-Sack-Arrest all Concerned Police for Sabotaging Evidence for Wantonly Closing a Genuine Case


VENKATASUBRAMANIAN
செப் 24, 2024 08:24

இதுதான் திராவிட மாடல் அரசு. காவல்துறை ஏன் இவ்வளவு கேவலமாக நடந்து கொள்கிறது


sankar
செப் 24, 2024 07:15

அரசு என்ன சொல்ல சொல்கிறதோ - அதுவே இவர்களின் திருவாய்மொழி - சற்றேறக்குறைய மேற்குவங்கம் மாதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை