உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / 16 டயர் கனிம லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

16 டயர் கனிம லாரி மோதி தனியார் நிறுவன மேலாளர் பலி

திருநெல்வேலி: திருநெல்வேலி காவல்கிணறு அருகே கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரிமோதியதில் நாகர்கோவிலை சேர்ந்த தனியார்ஷோரூம் மேலாளர் பலியானார்.திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரத்தில் செயல்படும் பல்வேறு குவாரிகளில் இருந்து கேரளாவுக்கு கனிம வளம் அதிகளவில்கொண்டு செல்லப்படுகிறது. இதே போல தென்காசி மாவட்டத்திலும்தென்காசி கடையம் சுற்று வட்டார குவாரிகளில் இருந்தும் குண்டுக்கல், சரள், எம் சாண்ட் போன்றவை செங்கோட்டை வழியே லாரிகளில் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது.நேற்று காலை ராதாபுரம் பகுதியில் இருந்து கனிம வளம் ஏற்றிச் சென்ற 16 டயர் டாரஸ் லாரி காவல்கிணறு ஜங்ஷன் பகுதியில் நடந்து சென்ற அமிர்தையா 64, மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். நாகர்கோவிலைச் சேர்ந்த இவர், அங்கு டூவீலர் ஷோரூம் மேலாளராக பணியாற்றி வந்தார்.கலெக்டர் உத்தரவை மீறும் லாரிகள்: திருநெல்வேலி மாவட்டத்தில் கனிம வளம் ஏற்றிச் செல்ல அதிகபட்சம் 10 டயர்கள் கொண்ட லாரிகளுக்கு மட்டுமே அனுமதி. அதற்கு மேலான எண்ணிக்கையில் டயர்கள் உள்ள லாரிகளுக்கு அனுமதியில்லை என கலெக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.நேற்றைய சம்பவத்தில் அமிர்தையா மீது மோதிய லாரி 16 டயர் கொண்ட டாரஸ் லாரியாகும். அதிக எண்ணிக்கையிலான டயர்களுடன் இயக்கப்படும் லாரிகள் அடிக்கடி விபத்துக்களால் உயிர்ப்பலிகளை ஏற்படுத்துகின்றன.மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறும் லாரிகள், நிறுவனங்கள் மீது போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Krishnamurthy Venkatesan
அக் 31, 2024 10:52

மாவட்ட collector in உத்தரவை மீறி 16 tire torrus வண்டிகளை இயக்குகிறார்கள் எனில் காவல் துறை சப்போர்ட் நிச்சயம் இருந்திருக்கும். பாவம் அப்பாவி ஒருவர் இறந்துள்ளார்.


முக்கிய வீடியோ