| ADDED : பிப் 10, 2024 01:35 AM
திருநெல்வேலி:தமிழகம் முழுவதிலும் இருந்து மக்கள் நல பணியாளர்கள் பிப்.15ல் சென்னையில் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளனர்.1990ல் தி.மு.க.,அரசு 25 ஆயிரம் மக்கள் நல பணியாளர்களை நியமித்தது. அதன் பின்னர் அ.தி.மு.க., அரசு 1991, 2001, 2011 ஆண்டுகளில் மூன்று முறை மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம் செய்தது.மீண்டும் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு 2022 ஜூலையில் ஏற்கனவே பணியாற்றிய 10 ஆயிரத்து 300 பேர் மீண்டும் ஊராட்சிகளில் பணி நியமனம் பெற்றுள்ளனர். அவர்களுக்கு காலமுறை சம்பளம் வழங்க வேண்டும். பணியின் போது இறந்த மக்கள் நல பணியாளர்களின் குடும்பங்களுக்கு ரூ .5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 நவ.22 ல் திருவாரூரிலும் டிசம்பரில் திண்டுக்கல்லில் பிச்சை எடுக்கும் போராட்டம், ஜன.31 சென்னையில் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். அடுத்த கட்ட போராட்டமாக பிப்.15 காலை 11:00க்கு சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் முதல் தலைமைச் செயலகம் வரை பேரணி நடத்த உள்ளதாக சங்க மாநில தலைவர் செல்லப்பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் புதியவன், மாநில பொருளாளர் ரெங்கராஜ் தெரிவித்துள்ளனர்.