உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / குடிநீர் மூலம் மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு விடுமுறை

குடிநீர் மூலம் மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு விடுமுறை

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் திதிடியூர் அருகே பி.எஸ்.என்., இன்ஜினியரிங் கல்லூரி உள்ளது. அதே வளாகத்தில் மேலும் இரு இன்ஜினியரிங் கல்லூரிகள், நர்சிங் கல்லூரி உள்ளிட்ட 5 கல்லூரிகள் உள்ளன. கல்லூரிகளின் எல்லா தேவைகளுக்கும் தண்ணீர் அங்குள்ள ஒரு ஓடையில் இருந்து எடுக்கப்படுகிறது. சுத்திகரிக்கப்படாத அந்த ஓடை நீரை சமையலுக்கும் மற்ற தேவைகளுக்கும் பயன்படுத்தியதால் மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதில் மாணவர் சுஜித் நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு எலிக்காய்ச்சல் எனும் லெப்டோஸ்பிரோசிஸ் உறுதியானதால் மாவட்ட சுகாதார அலுவலர் விஜய் சந்திரன் தலைமையில் சுகாதாரத்துறையினர் கல்லூரி வளாகத்தில் ஆய்வில் ஈடுபட்டனர். ஏழு மாணவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. சுகாதார அலுவலர் விஜய் சந்திரன் கூறியதாவது: தினமும் திருநெல்வேலி, பக்கத்து மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள காய்ச்சல் குறித்த விவரங்கள் சேகரிப்போம். நாகர்கோவிலில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மாணவர் திடியூர் கல்லூரியில் பயில்பவர் என தெரிய வந்ததால் கல்லூரியில் சோதனை மேற்கொண்டோம். ஏழு மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு இருந்தது. எனவே குடிநீர் குழாய் லைன்களை சீர் செய்யவும் முறையாக தண்ணீரை சுத்திகரித்து வழங்கவும் அதுவரையிலும் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கவும் கேட்டுக் கொண்டோம் என்றார். இதையடுத்து பி.எஸ்.என்., கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகமும் மாணவர்களுக்கு எலிக்காய்ச்சல் இருப்பதை ஒப்புக்கொண்டுள்ளனர். ஓரிரு நாட்களில் கல்லூரிகள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை