உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தந்தையின் கிட்னியை மகனுக்கு பொருத்திய பிறகு அழுகியதால் அகற்றம்: உறவினர்கள் போராட்டம்

தந்தையின் கிட்னியை மகனுக்கு பொருத்திய பிறகு அழுகியதால் அகற்றம்: உறவினர்கள் போராட்டம்

திருநெல்வேலி: திருநெல்வேலியில் சிறுநீரகம் பாதித்த மகனுக்கு பொருத்தப்பட்ட தந்தையின் கிட்னி செயல்படாததால் அகற்றப்பட்டது. உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 40. இவரது மகன் சரவணக்குமார் 19. இவருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்துக் கொண்டார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டிருந்த சரவணக்குமாருக்கு தந்தை தமது சிறுநீரகத்தை தர முன் வந்தார். ஆக.,21 ஆப்பரேஷன் நடந்தது. இரண்டு நாட்கள் சரியாக இருந்தது. அதன் பிறகு செயல்பாடு இல்லை. இதனால் கிட்னி அழுகும் நிலை ஏற்பட்டது. சரவணக்குமாரின் உயிருக்கு ஆபத்து என்பதால் அந்த கிட்னியை டாக்டர்கள் அகற்றினர். இதனால் மாரீஸ்வரன், சரவணகுமார் இருவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த உறவினர்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாரீஸ்வரன் உறவினர் களிடம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் டாக்டர் ரேவதி பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் கூறுகையில், இத்தகைய ஆப்பரேஷன்களில் 88 சதவீதம் வெற்றி கிடைத்துவிடும். ஆனால் சரவணகுமார் உடல் கிட்னியை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே அகற்றினோம். இருவரும் சிகிச்சையில் உள்ளனர். வேறு நபர்களிடம் கிட்னி பெற்று சிகிச்சை அளிக்கப்படும், என்றார். டீன் பேச்சுவார்த்தையை உறவினர்கள் ஏற்றுக் கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Kannan Chandran
ஆக 26, 2025 16:16

ஐயா எங்களுக்கு கிட்னி திருட மட்டுமே தெரியும்க, ஒட்ட வைக்க தெரியாது...


VSMani
ஆக 26, 2025 12:21

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் உறுப்பு மாற்று சிகிச்சைக்கு மிகவும் தேர்ந்தவர்கள் அல்லர். சென்னை ராஜிவ் காந்தி , ஸ்டான்லி ஓமந்தூரார் மருத்துவமனை பிரசித்தமானது.


சமீபத்திய செய்தி