உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு

மாணவிக்கு பாலியல் தொந்தரவு; பேராசிரியர் மீது வழக்கு

திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி இன்ஜினியரிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பேராசிரியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சேரன்மகாதேவி ஸ்காட் இன்ஜினியரிங் கல்லூரி மின்னணுவியல் துறை துணைப் பேராசிரியர் ஜான் சாமுவேல் ராஜ் 37. தன் வகுப்பு மாணவ, மாணவிகளை கல்வி சுற்றுலாவுக்காக கேரள மாநிலம் மூணாறு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது ஒரு மாணவிக்கு அவர் பாலியல் தொந்தரவு செய்துள்ளார். ஆனால் மாணவிகள் யாரும் புகார் அளிக்கவில்லை. சுற்றுலா முடிந்து கல்லூரிக்கு வந்தபின் சில மாணவர்கள் பேராசிரியர் மீது தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி போலீசார் வழக்கு பதிவு செய்து, 4 மாணவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து சக மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கல்லூரி நிர்வாகம் பேராசிரியர் ஜான் சாமுவேல் ராஜை சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில், கல்லூரிக்குள் நடந்த தகராறு குறித்து தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்த சேரன்மகாதேவி போலீசார், ஏன் பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டு குறித்து தாமாக வழக்கு பதிவு செய்யவில்லை என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் நேற்று சேரன்மகாதேவி போலீசார் ஜான் சாமுவேல் ராஜ் மீது மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கு பதிவு செய்தனர். புகார் அளித்த மாணவியின் விவரங்களும், வழக்கு பதிவு செய்யப்பட்ட சட்டப் பிரிவுகளும் குறித்து மாவட்ட எஸ்.பி.,அலுவலகம் எந்தத் தகவலும் வெளியிடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ