உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாலிபர் மீது காரை மோதி 200 மீட்டர் இழுத்துச்சென்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்

வாலிபர் மீது காரை மோதி 200 மீட்டர் இழுத்துச்சென்ற எஸ்.ஐ., சஸ்பெண்ட்

திருநெல்வேலி:வாலிபர் மீது காரை மோதி, பேனட்டில் விழுந்த அவரை 200 மீட்டர் துாரம் இழுத்துச்சென்ற போலீஸ் எஸ்.ஐ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், கயத்தாரை சேர்ந்த காந்திராஜன், 59; திருநெல்வேலி போக்குவரத்து போலீஸ் சிறப்பு எஸ்.ஐ.,யாக உள்ளார். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, காந்திராஜன் காரில் சென்ற போது, டவுன் தெற்கு மவுண்ட் ரோட்டில் முன்னால் ஒரு பஸ் சென்றது. பஸ்சுக்கும், எஸ்.ஐ., காருக்கும் நடுவில் டூ வீலரில் ஒருவர் சென்றார். அவர் மீது எஸ்.ஐ., ஓட்டிய கார் மோதியது. வாலிபர் டூ வீலரை ஓரமாக நிறுத்தி விட்டு காந்திராஜனிடம் தகராறு செய்தார். காந்திராஜனும் அப்போது போதையில் இருந்துள்ளார். அந்த நபர், திருநெல்வேலி டவுன் செண்பகம் பிள்ளை தெருவை சேர்ந்த அசோக்குமார், 35, என, தெரியவந்தது. அசோக்குமார் எஸ்.ஐ., காரின் பேனட்டில் படுத்தபடி தகராறு செய்தார். காந்திராஜன் அவரை பேனட் மீது படுத்தவாறே 200 மீட்டர் துாரத்திற்கு காரை ஓட்டிச் செல்ல, அந்த நபர் அலறி துடித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி, நேற்று எஸ்.ஐ.,யை சஸ்பெண்ட் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

1968shylaja kumari
செப் 19, 2025 20:56

பல பொதுமக்கள் ""சஸ்பெண்ட் "" என்றால் மிகப்பெரிய தண்டனை என்று நினைக்கிறார்கள் . அது ஒரு ஏமாற்று வேலை. நானும் அரசாங்கத்தில் தான் பணிபுரியும்போது மூன்று முறை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளேன். ஆனால் ஒரு பெரிய நஷ்டமும் இல்லை.


Vasan
செப் 19, 2025 16:05

Suspend or suspended? Suspend means hanging. . தொங்க விடப்பட்டாரா, பதவி நீக்கம் செய்யப்பட்டாரா ?


Sridhar
செப் 19, 2025 13:44

உன்கிட்டே பவர் இருந்தால் என்னவேணுமானாலும் செய்வாயா உன்ன மாதிரி ஆள் இருப்பதால் போலீஸ் டெபார்ட்மெண்ட்க்கு கேட்ட பேறு தமிழ் நாடு போலீஸ்க்கு அவமானம் தேடி தராதே


நிக்கோல்தாம்சன்
செப் 19, 2025 06:46

என்ன ஒரு கேவலம் , திமுக ஆட்சிக்கு வந்தபிறகு காவல்துறையின் அராஜகம் வெவேறு லெவெளில் மிளிருகிறது


Mani . V
செப் 19, 2025 03:46

இந்த ரௌடியை என்கவுண்டரில் போட்டுத் தள்ள முடியாதா யுவர் ஹானர்?


Vasan
செப் 19, 2025 16:10

என்கவுண்டர் இல் போட்டு தள்ள வேண்டாம். மாறாக இழுத்து செல்லுங்கள். இழுக்க இழுக்க இன்பம் இறுதி மூச்சு வரை.


முக்கிய வீடியோ