உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை

மாணவர்களை கடித்த வெறிநாய் அடித்து கொலை

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் காவல்கிணறு அரசு பள்ளி அருகே வெறிநாய் கடித்ததில் மாணவர்கள் 3 பேர் உட்பட 6 பேர் காயமுற்றனர்.பள்ளி முன் விளையாடிக்கொண்டிருந்த மாணவர்களை வெறிநாய் திடீரென கடித்தது. 6ம் வகுப்பு மாணவன், இரண்டு மாணவிகள், அதே பகுதியில் கடைகளுக்கு முன்பு நின்று கொண்டிருந்த 3 பேரை கடித்தது.காயமடைந்தவர்கள் வடக்கன்குளம், பணகுடி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து பலரையும் கடித்து வந்த நாயை பொது மக்கள் அடித்து கொன்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை