உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே கொலையான வாலிபர் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தை சேர்ந்த பாண்டியன் மகன் முத்து பெருமாள் 25. திருநெல்வேலியில் தனியார் மோட்டார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.ஜன.1 காலையில் திருநெல்வேலி -- கன்னியாகுமரி நான்கு வழிச்சாலையில் ரெட்டியார்பட்டி அருகே தகராறில் மூன்று பேர் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். போலீசார், கருங்குளம் அருகே காரசேரியைச் சேர்ந்த முத்துப்பாண்டி, இசக்கி ஆகியோரை கைது செய்தனர். ஊய்க்காட்டான் என்பவர் திருப்பூர் கோர்ட்டில் சரணடைந்தார்.2 நாட்களாக அவரது உடலை பெற்றுக்கொள்ளாமல் உறவினர்கள் புறக்கணித்தனர். பேச்சுவார்த்தையில் அரசு இழப்பீடு, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றை வழங்க அதிகாரிகள் உறுதி அளித்ததால் நேற்று உடலை பெற்று இறுதி சடங்குகளை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை