உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / விலைவாசி உயர்வை கண்டித்து சாலைமறியல் நெல்லையில் மாதர் சங்கத்தினர் 545 பேர் கைது

விலைவாசி உயர்வை கண்டித்து சாலைமறியல் நெல்லையில் மாதர் சங்கத்தினர் 545 பேர் கைது

திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் விலைவாசி உயர்வை கண்டித்து 8 இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்ட அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சேர்ந்த 545 பேர் கைது செய்யப்பட்டனர்.விலைவாசி உயர்வை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்படுத்துவது, தமிழகத்துக்கு மண்ணெண்ணைய் ஒதுக்கீட்டை அதிகரிப்பது, அனைத்து கார்டுதாரர்களுக்கும் மண்ணெண்ணைய் வழங்குவது, பொது விநியோக முறையை பலப்படுத்துவது, ரேஷன் கடைகளில் அத்தியாவசியப்பொருட்கள் கடத்தப்படுவதை தடுப்பது, விண்ணப்பித்த அனைவருக்கும் ரேஷன்கார்டு, விதவை, முதியோர் உதவித்தொகை வழங்குவது, நெல்லையில் குடிநீர் பற்றாக்குறை, சுகாதாரக்கேட்டை போக்குவது, அனைத்து பகுதிகளுக்கும் பாதாளச்சாக்கடை திட்டத்தை விரிவுபடுத்துவது, பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரி பிரசவ வார்டில் கூடுதல் படுக்கை வசதி அளிப்பது, சுகாதாரத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.நெல்லை மாவட்டத்தில் 8 இடங்களில் மாதர் சங்கத்தினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். நெல்லை ஜங்ஷன் பஸ்ஸ்டாண்ட் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாநகர செயலாளர் ஆறுமுகலட்சுமி, பொருளாளர் ராஜலட்சுமி, துணைத்தலைவர் சூசை திலகவதி தலைமை வகித்தனர். ஆனந்தி, லட்சுமி, சாந்தி, செய்யதுஅலிபாத்திமா, சாலியாபீவி, பேச்சியம்மாள், மாவட்டப்பொருளாளர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ரோட்டில் அமர்ந்து கோஷமிட்டவர்களை போலீசார் வாகனத்தில் ஏற்றினர். 21 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.களக்காட்டில் மறியலில் ஈடுபட்ட 52 பேர், சேரன்மகாதேவியில் 318, ஆலங்குளத்தில் 17, பாவூர்சத்திரத்தில் 47, தென்காசியில் 16, இலத்தூரில் 50, சங்கரன்கோவிலில் 24 பேர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 545 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி