மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
சிவகிரி : சிவகிரியில் காட்டு பகுதியில் தண்ணீர் எடுக்க சென்ற தொழிலாளியை யானை மிதித்து கொன்றது.சிவகிரி பஜனைமடத்து தெருவை சேர்ந்தவர் ராமர் மகன் கருப்பையா (50). இவர் சிவகிரிக்கு மேற்கே கோம்பையாற்று பக்கத்தில் உள்ள கருவேப்பிலை கருப்பசாமி கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடி பொங்கல் மற்றும் குரு பூஜைக்காக சென்றிருந்தார். அப்போது குடிப்பதற்கு தண்ணீர் எடுக்க சுமார் 5 பேருடன் தலையணை பகுதிக்கு சென்றுள்ளனர். இவர்களின் சத்தம்கேட்டு அப்பகுதியில் நின்ற யானை இவர்களை விரட்டியது.இவருடன் வந்த அனைவரும் தண்ணீர் கேன்களை கீழே போட்டுவிட்டு தப்பியோவிட்டனர். இதில் கருப்பையாவை யானை துதிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோயிலுக்கு சென்றவர்கள் சிவகிரி போலீசில் புகார் செய்தனர்.இன்ஸ்பெக்டர் பொம்மையசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பையாவின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாவட்ட வன அலுவலர் அம்புரோஸ், வனவர் ஆஸ்கர்ராஜ் மற்றும் சாலமன்ராஜன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று யானை தொழிலாளியை கொன்றது குறித்து விசாரணை நடத்தினர்.பின்னர் யானை மிதித்து பரிதாபமாக இறந்த கருப்பையாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி தமிழக அரசு நிவாரண நிதியான ரூ.25 ஆயிரத்தை கருப்பையாவின் மனைவி பழனியம்மாளிடம் வழங்கினர். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
29-Sep-2025
25-Sep-2025