உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / ஆலங்குளம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

ஆலங்குளம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பலி

ஆலங்குளம் : ஆலங்குளம் அருகே டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் பரிதாபமாக பலியானார். ஆலங்குளம் அருகேயுள்ள துத்திகுளத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் குட்டிராஜா (22). லோடுமேன். நேற்று மாலை டிராக்டரில் தண்ணீர் லோடு ஏற்றிக் கொண்டு டிரைவர் இல்லாததால் குட்டிராஜாவே டிராக்டரை ஓட்டி வந்துள்ளார். துத்திகுளம் அருகே மெயின்ரோட்டில் டிராக்டர் ஏற முயன்றபோது நிலை தடுமாறி எதிரே இருந்த பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. இதில் குட்டிராஜா சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை