உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / "தென்காசி ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்

"தென்காசி ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்

தென்காசி : 'தென்காசி ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடிக்க வேண்டும்' என ரத்ததான கழகம் வலியுறுத்தியுள்ளது. தென்காசி ரத்ததான கழக கவுரவ தலைவர் குமார், தலைவர் ஜெபா, செயலாளர் முகம்மதுஅலி, பொருளாளர் மாரியப்பன், முகம்மது முஸ்தபா, செந்தூர் பாண்டியன், சாகுல்கமீது தென்காசி ஆர்.டி.ஓ.விடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 'தென்காசி ரயில்வே ரோட்டில் கடந்த 2009ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணி துவங்கியது. பணி துவக்கிய போதே சர்வீஸ் ரோடு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இன்று வரை முறையாக சர்வீஸ் ரோடு அமைக்கப்படவில்லை. இதனால் பல்வேறு வகையான பாதைகள் வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சென்று வரும் நிலை உள்ளது. நகரின் முக்கிய தேவையான மேம்பாலத்திற்காக இன்று வரை அனைத்து தரப்பு பொதுமக்களும் பல்வேறு இன்னல்களையும் கஷ்டங்களையும் சோதனைகளையும் பொறுமையுடன் சகித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாத காலமாக மேம்பால பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினரும் மிகவும் துன்பப்படுகின்றனர். தென்காசி மக்களின் நலன் கருதி ரயில்வே மேம்பால பணியை விரைவில் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை