மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
திருநெல்வேலி : பாளை. யில் நடந்த 'மெகா' விளையாட்டுப்போட்டிகளில் மாணவியர் பிரிவில் முதலிடம் பெற்ற பெல் பள்ளிக்கு போலீஸ் கமிஷனர் கோப்பை வழங்கினார். விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பெல்பின்ஸ் நிறுவனம் சார்பில் நெல்லை மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையிலான 'மெகா' விளையாட்டுப்போட்டிகள் கடந்த 27ம்தேதி பாளை. யில் நடந்தன. 39 விளையாட்டுப்போட்டிகளில் 4,100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். 300 நடுவர்கள் போட்டிகளை நடத்தினர். போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பெற்ற 1,800 மாணவ, மாணவிகளுக்கு எம்.எல்.ஏ., நயினார் நாகேந்திரன் பதக்கம், சான்றிதழ் வழங்கினார். போட்டிகளில் பங்கேற்ற 171 பள்ளிகளுக்கு கிடைத்த வெற்றிப்புள்ளிகள் அடிப்படையில் மாணவர்கள் பிரிவில் பாளை. சேவியர் பள்ளி முதலிடம், பெல் பள்ளி இரண்டாம் இடம், ஜான்ஸ் பள்ளி மூன்றாம் இடம், மாணவிகள் பிரிவில் பாளை. பெல் பள்ளி முதலிடம், இக்னேஷியஸ் கான்வென்ட் இரண்டாம் இடம், சாராள்டக்கர் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடம் பெற்றது. சிறப்பிடம் பெற்ற பள்ளிகளுக்கு போலீஸ் கமிஷனர் வரதராஜூ கோப்பை வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் சேவியர் ஜோதிசற்குணம், பெல்பின்ஸ் இயக்குனர் சஞ்சய் குணசிங், பள்ளி தலைமையாசிரியர்கள், மாணவ, மாணவிகள், பயிற்றுனர்கள் சத்யக்குமார், ஜிம் பராமரிப்பாளர் லட்சுமணன் உடன் இருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025