உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நயினார்குளம் நடுரோட்டில் மின்கம்பம்வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம்

நயினார்குளம் நடுரோட்டில் மின்கம்பம்வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம்

திருநெல்வேலி:நெல்லை டவுன், நயினார்குளம் ரோட்டின் மையப்பகுதியில் மின்கம்பங்கள் அமைந்துள்ளதால் இரவு நேரங்களில் வாகனங்கள் விபத்திற்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.நெல்லை டவுன், நயினார்குளம்- தச்சநல்லூர் மார்க்கெட் ரோடு சந்திப்பு பகுதியில் மின்வாரியத்தினர் டிரான்ஸ்பார்மர் அமைத்துள்ளனர். பலத்த காற்று வீசும் போது டிரான்பார்மர் கீழே சாய்ந்து விடாமல் இருக்க ரோட்டின் மையப்பகுதியில் இரண்டு மின் கம்பங்கள் நடப்பட்டுள்ளது. இந்த கம்பங்களின் மின் விளக்குகளும் பொருத்தப்பட்டிருந்தது.சம்பந்தப்பட்ட மின்கம்பங்கள் நடுரோட்டில் அமைந்துள்ளதால், நெல்லை டவுன் நயினார்குளத்தில் இருந்து தச்சநல்லூர் செல்லக்கூடிய வாகனங்கள் இரவு நேரத்தில் மின் கம்பங்களின் மோதி விபத்திற்குள்ளாகின்றன. இதனால் மின்கம்பத்தின் சிமென்ட் பெயர்ந்துள்ளது.பெரிய விபத்து ஏற்படும் முன் ரோட்டின் மையப்பகுதியில் உள்ள மின் கம்பங்களை அப்புறப்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை