உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / திருவேங்கடம் பள்ளியில் பரிசளிப்பு விழா

திருவேங்கடம் பள்ளியில் பரிசளிப்பு விழா

திருவேங்கடம்:திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.திருவேங்கடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுதந்திர தின விழா நடந்தது. தலைமை ஆசிரியை ஜெகஜோதி தலைமை வகித்து வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசுப்பு முன்னிலை வகித்து தேசிய கொடியேற்றினார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவிகள் ஏஞ்சல் ஐரீஸ், ஸ்ரீபிரியா, கற்பகவள்ளி ஆகியோருக்கு கோப்பம்மாள் நினைவு பரிசாக முறையே ஐந்து, மூன்று, இரண்டு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.திருவேங்கடம் டவுன் பஞ்., தலைவர் செந்தாமரைக்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசினை வழங்கி வாழ்த்தி பேசினார். தொடர்ந்து பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. உதவி தலைமை ஆசிரியர் சோமசுந்தரம் நன்றி கூறினார்.ஏற்பாடுகளை என்.எஸ்.எஸ்.திட்ட அலுவலர் பொன்னிருளாண்டி தலைமையில் மாணவர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை