மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
புளியங்குடி:புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதிய பெரிய தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடந்தது.புளியங்குடியில் பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் இரண்டு தேர்கள் உள்ளன. இவைகள் நீண்ட காலமாக பழுதான நிலையில் தேரோட்டம் தடைபட்டிருந்தது. இதில் கடந்த சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னாள் சிறிய தேர் மட்டும் பழுது நீக்கப்பட்டு தேரோட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் பங்குனி மாதத்தில் பங்குனி உத்திர விழாவில் தேரோட்டம் நடைபெற வேண்டும் என்பதற்காக பெரிய தேரை புதுப்பித்து தேரோட்டம் நடத்த பக்தர்கள் இந்துசமய அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து பங்குனி உத்திர திருவிழாவில் தேரோட்டம் நடைபெற பெரிய தேரை புதியதாக உருவாக்க முடிவு செய்து அதற்கான தேர் திருப்பணிக் கமிட்டி ஒன்றை அரசு உருவாக்கியது. புளியங்குடி பாலாஜி கிரானைட்ஸ் அதிபர் ஆன்மிக செம்மல் பி.எஸ். சங்கரநாராயணன் தலைமையில் திருப்பணி கமிட்டி ஒன்று அமைக்கப்பட்டது.சுமார் 32 அடி உயரத்தில் பெரிய தேரை பொன்அமராவதியை சேர்ந்த ஸ்தபதி செல்வம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்டனர். பின்னர் தேர் உருவாக்கும் பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில் நேற்று காலை புதிய பெரிய தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.முன்னதாக கோயிலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெரிய தேர் பூ, வாழை மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் மூலவரான பாலமுருகருக்கு கோயில் அர்ச்சகர் கண்ணன்பட்டர், முருகன்பட்டர் ஆகியோர் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை செய்தனர். தொடர்ந்து கும்பம் எடுத்து புதிய தேர் வெள்ளோட்டத்திற்காக காலை 9 மணியளவில் தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து புதிய தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து காலை 9.15 மணிக்கு தேர் வெள்ளோட்டநிகழ்ச்சி துவங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் வாசுதேவநல்லூர் எம்எல்ஏ துரையப்பா, ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், தேர் திருப்பணி கமிட்டி தலைவர் ஆன்மிக செம்மல் சங்கரநாராயணன், அதிமுக நகர செயலாளர் சங்கரபாண்டியன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், கோயில் ஆய்வாளர் ராமசாமி, புளியங்குடி நகராட்சிதலைவர் (பொறுப்பு) முகமது இஸ்மாயில், கிருஷ்ணாபுரம் அரசு ஒப்பந்ததாரர் அருணாசலம், சங்கரன்பிள்ளை ஹார்டுவேர்ஸ் அதிபர்கள் திருமலை, மாரியப்பன், சேதுராமன், ஆடிக் கார்த்திகை கமிட்டி சண்முகசுந்தரம், அதிமுக மாநில பேச்சாளர் கோவை புகாரி, வைகோ பாசறை அமைப்பாளர் பீர்முகமது, சிவகிரி தாசில்தார் (பொறுப்பு) லூர்துசாமி, வக்கீல் திருமலைக்குமார், நகராட்சி உறுப்பினர்கள் திருப்பதி, ஆறுமுகச்சாமி, ராஜேஸ்வரி சுரேஷ், பாலகிருஷ்ணன், புளியங்குடி வருவாய் ஆய்வாளர் அரிகரன், கிராம நிர்வாக அலுவலர் கல்யாணசுந்தரம் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' கோஷங்கள் முழங்க தேரை வடம்பிடித்து இழுத்தனர். தொடர்ந்து நான்கு ரதவீதிகள் வழியாக வலம் வந்து காலை 10.30 மணிக்கு நிலையம் வந்து சேர்ந்தது. முன்னதாக தேரோட்ட விழாவிற்கு வருகை புரிந்த வாசுதேவநல்லூர் எம்எல்ஏ துரையப்பா, ஓய்வுபெற்ற காவல்துறை இயக்குனர் ராஜேந்திரன், அதிமுக செயலாளர் சங்கரபாண்டியன், கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், ஆய்வாளர் ராமசாமி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு தேர் திருப்பணி கமிட்டி தலைவர் ஆன்மிக செம்மல் சங்கரநாராயணன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.தேர் வெள்ளோட்டத்தின் போது வருணபகவானின் கருணை பார்வையால் வான்மழை பன்னீராக தூவியது. இதனால் வெயிலின் தாக்கம் குன்றி இதமான சூழ்நிலை ஏற்பட்டதால் பக்தர்கள் உற்சாகத்துடன் தேரை வடம்பிடித்து இழுத்தனர்.தேர் வெள்ளோட்ட நிகழ்ச்சியில் மகாலட்சுமி ஆஸ்பத்திரி டாக்டர் சுப்பிரமணியன், லயன்ஸ் சங்க முன்னாள் செயலாளர் முரளிதரன், ஆசிரியர் ஜோசப் அமல்ராஜ், தொழிலதிபர் பி.டி.சாமி, மகேஷ் விதைப்பண்ணை அதிபர் மாரியப்பன், மீனாட்சி திரையரங்கம் உரிமையாளர் அருணாசலம், பாலா தையலக உரிமையாளர் அருணாசலம், அகில பாரத அய்யப்பா சேவா சங்க மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார், காங்., மாநில பொதுக்குழு உறுப்பினர் கோமதிநாயகம், பழனியப்பன் ஆப்செட் அதிபர் மீனாட்சிசுந்தரம், தொழிலதிபர் அருணாசலம், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வக்கீல் பிச்சையா, ஒரு சொல் ஜவுளி ஸ்டோர் அதிபர் சுந்தர், தபசுநாத முதலியார் பாத்திரகடை உரிமையாளர் கணேசன், ஓட்டல் ராம்ராஜ் அதிபர் நாகராஜன், பா.ஜ., மாவட்ட துணைத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.தேரோட்டத்தின் போது நாதஸ்வர வித்வான் சிந்தாமணி முருகன் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. தேரோட்டத்தை முன்னிட்டு புளியங்குடி டிஎஸ்பி ஜமீம் நேரடி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
29-Sep-2025
25-Sep-2025