மேலும் செய்திகள்
ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
29-Sep-2025
நெல்லையில் ஹெலிகாப்டர் சுற்றுலா
25-Sep-2025
தென்காசி:தென்காசியில் ரயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறாத நிலையில் மேம்பால தடுப்பு சுவரில் லாரி மோதியது.தென்காசி ரயில்வே ரோட்டில் ரயில்வே மேம்பால பணி கடந்த 2009ம் ஆண்டு துவங்கியது. இப்பணி இன்னும் நிறைவு பெறவில்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மேம்பால பணி நிறுத்தப்பட்டது. இப்பணியை விரைவில் தொடர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேம்பால பணிநடப்பதால் இவ்வழியே கனரக வாகனங்கள் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. ஆனால் இதனை பெரும்பான்மையான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பதில்லை.இதுபற்றி போலீசாரும் கண்டு கொள்வதில்லை என்பதால் கனரக வாகனங்கள் அடிக்கடி இவ்வழியே சென்று வருகின்றன. இதனால் இதர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. கனரக வாகனங்கள் இவ்வழியே செல்லும் போதெல்லாம் டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. இந்நிலையில் நேற்று ரயில்வே மேம்பாலம் தெற்கு பகுதியில் துவங்கும் இடம் அருகே அதிக லோடு ஏற்றிய லாரி ஒன்று சென்றது. அப்போது எதிரே மினி லாரி ஒன்று வந்தபோது எதிர்பாராதவிதமாக மேம்பால தடுப்பு சுவரில் லோடு லாரி மோதியது.இதுபோன்ற விபத்துகள் தொடராமல் இருக்க கனரக வாகனங்கள் குறிப்பாக ஓவர் லோடு ஏற்றி செல்லும் லாரிகள் ரயில்வே ரோடு வழியே செல்ல தடை விதிக்க டிராபிக் போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
29-Sep-2025
25-Sep-2025