உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / வாசுதேவநல்லூர் கோயிலில் ஆடி கார்த்திகை விழா

வாசுதேவநல்லூர் கோயிலில் ஆடி கார்த்திகை விழா

சிவகிரி : வாசுதேவநல்லூர் கோயிலில் ஆடி கார்த்திகை விழா நடந்தது.வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி கோயிலில் கார்த்திகை சங்கத்தின் சார்பில் ஆடி கார்த்திகை பெருவிழா நடந்தது. அன்று காலையில் விநாயகர், சண்முகர், பாலமுருகர் ஆகிய தெய்வங்களுக்கு முன் கந்தர் கலிவெண்பா, கந்தர் அநுபூதி பாடப்பட்டது. தொடர்ந்து மூலவர் அர்த்தநாரீஸ்வரர் உட்பட அனைத்து பரிவார தெய்வங்களுக்கும் பால், தயிர், நெய், பன்னீர், எலுமிச்சை சாறு, கரும்புச்சாறு, விபூதி, சந்தனம், குங்குமம் உட்பட 18 வகையான நறுமண பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின் அலங்கார, தீபாராதனை மற்றும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அலுவலர் முருகேசன் ஆலேசனையின் பேரில் கார்த்திகை சங்கத்தின் தலைவர் சவுந்தரராஜன், துணைத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் சீமைத்துரை, பொருளாளர் ஆறுமுகம் உட்பட பலர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை