மேலும் செய்திகள்
சிட்டி கிரைம் செய்திகள்
03-Dec-2025
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை அருகே உள்ள பெரியதாழை சுனாமி காலனியைச் சேர்ந்தவர் ராஜ். இவரது மகன் யோசுவா 21. இவரது நண்பர் ஜார்ஜியார்நகரைச் சேர்ந்த சாலமோன் 20. இருவரும் திருச்செந்தூரில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் பயின்று வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் டூவீலரில் உவரிக்கு சென்று மீண்டும் ஊருக்கு திரும்பினர். கூட்டப்பனை அருகே முன் சென்ற வாகனத்தை முந்த முயன்றனர். அப்போது எதிரே வந்த வேன் எதிர்பாராத விதம் டூவீலர் மீது மோதியது. இதில் இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் இறந்தனர். உவரி போலீசார் விசாரிக்கின்றனர்.
03-Dec-2025