உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சந்தேகத்தில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

சந்தேகத்தில் கணவர் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய மனைவி கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியில் வேறொரு பெண்ணுடன் தொடர்பில் இருந்ததால் ஆத்திரமடைந்த மனைவி, கணவர் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதால் கைது செய்யப்பட்டார்.திருநெல்வேலி மாவட்டம் திருச்செந்துார் சாலையில் உள்ள கிருஷ்ணாபுரத்தில் வசிப்பவர் பாலசுப்ரமணியன் 42. ஆட்டோ டிரைவர். இவருக்கும் துாத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி 36,க்கும் 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. மூன்று மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.பாலசுப்ரமணியன் அதே பகுதியில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார். வீட்டு செலவுக்கு சரி வர பணம் தரவில்லையாம். இதனால் கணவன், மனைவியிடையே தகராறு ஏற்பட்டது. 15 தினங்களுக்கு முன் முத்துலட்சுமி குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.பின்னர் பேச்சு வார்த்தைக்கு பிறகு கணவர் வீட்டுக்கு வந்தார். இருப்பினும் கணவர், அந்த பெண்ணுடன் தொடர்பை நிறுத்திக் கொள்ளாததால் ஆத்திரமுற்றார்.அதிகாலை 3:30 மணியளவில் வீட்டில் வாங்கி வைத்திருந்த ஒரு லிட்டர் பாமாயிலை நன்கு கொதிக்க வைத்தார். துாங்கிக் கொண்டிருந்த கணவர் மீது முதலில் தண்ணீரை ஊற்றி எழுப்பினார். தொடர்ந்து காய்ச்சிய எண்ணையை அவரது வயிற்றுப் பகுதியில் கொட்டினார். இதில் பலத்த காயமுற்ற பாலசுப்ரமணியன் அலறித்துடித்தார். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடத்தை சந்தேகத்தில் மனைவி கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதாக புகார் அளித்தார். முத்துலட்சுமியை கொலை முயற்சி வழக்கில் கைது செய்த சிவந்திபட்டி போலீசார் கொக்கிரகுளம் பெண்கள் சிறையில் அடைத்தனர். பாலசுப்பிரமணியத்திற்கு இடுப்பு, வயிறு பகுதியில் 40 சதவீதம் காயம் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி