மேலும் செய்திகள்
10 பவுன் மோசடி 4 பேர் மீது வழக்கு
25-Sep-2025
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சப் கலெக்டர் போல நடித்து உறவினரிடம் 10 பவுன் நகை வாங்கி திருப்பித் தராமல் ஏமாற்றிய பெண் கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி மாவட்டம் காரியாகுளத்தை சேர்ந்தவர் மகிழ்வதனா. இவரது துாரத்து உறவினர் நக்கனேரியைச் சேர்ந்த சத்யாதேவி 34. இவர் தான் சப் கலெக்டராக இருப்பதாக அறிமுகப்படுத்திக் கொண்டார். “ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள அரசு ஒப்பந்தத்தை பெற வேண்டும். அதற்கு 100 பவுன் நகை அவசியம். தற்போது தன்னிடம் 90 பவுன் நகை உள்ளது. மீதம் தேவையுள்ள 10 பவுன் நகையை கொடுத்தால், ஒப்பந்தம் கிடைத்ததும் அதிக லாபம் தருவேன்,” எனக்கூறி, மகிழ்வதனாவின் கணவரிடமிருந்து 10 பவுன் நகை பெற்றுள்ளார். அதன்பின் நகையை திருப்பித் தரவில்லை. இதுகுறித்து கேட்டபோதும், சத்யாதேவி முறையாக பதில் அளிக்கவில்லை. இதையடுத்து மகிழ்வதனா, திருநெல்வேலி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். சத்யாதேவியை போலீசார் கைது செய்தனர்.
25-Sep-2025