100 கிலோ குட்கா பறிமுதல் கும்மிடி.,யில் பெண் கைது
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அடுத்த புதுப்பேட்டை கிராமத்தில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலின்பிடி, கும்மிடிப்பூண்டி சிப்காட் பேலீசார் அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அங்குள்ள பெட்டிக்கடை ஒன்றில் சோதனை மேற்கொண்டனர். அங்கு, பண்டல்களில்,100 கிலோ குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது.அதையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். விற்பனையில் ஈடுபட்டு வந்த, பகுராம் மனைவி சாரதா, 38, என்பவரை கைது செய்தனர்.