உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூர் தொகுதியில் 14 மனு ஏற்பு

திருவள்ளூர் தொகுதியில் 14 மனு ஏற்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் லோக்சபா தனி தொகுதியில், கடந்த, 20ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கி, நேற்று முன்தினம் வேட்பு மனு நிறைவு பெற்றது. இதில் தி.மு.க., கூட்டணி காங்., அ.தி.மு.க., கூட்டணி தே.மு.தி.க., பா.ஜ., நாம்தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என மொத்தம், 31 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர்.நேற்று வேட்பு மனு பரிசீலனை நடந்தது. இதில் பிரதான கட்சி வேட்பாளர்களான காங்., சசிகாந்த், தே.மு.தி.க., நல்லதம்பி, பா.ஜ., பொன் பாலகணபதி, நாம்தமிழர் கட்சி தமிழ்மதி உள்ளிட்ட 14 பேர் மனு க்கள்ஏற்கப்பட்டன.கூடுதல் மனு, மாற்று வேட்பாளர் மற்றும் உரிய ஆவணங்கள் இல்லாத, 17 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை