உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி..

2 குழந்தைகள் பலியான தீ விபத்தில் தாயும் பலி..

திருத்தணி: திருத்தணி முருகப்பா நகரில் வசித்து வருபவர் பிரேம்குமார். இவர் வசித்து வரும் வாடகை வீட்டில் கடந்த 6ம் தேதி மூன்று இருசக்கர வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன. இதில், பிரேம்குமார், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் அவரது 1-2 வயது மகன்களும் படுகாயம் அடைந்தனர். திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் நான்கு பேரும் அனுமதிக்கப்பட்டனர். இதில், குழந்தைகள் நவிலன், மிதுலன் இருவரும் பலியாகினர். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த மஞ்சுளா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். பிரேம்குமார் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.திருத்தணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி