உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / வாகனம் மோதி 4 எருமைகள் பலி

வாகனம் மோதி 4 எருமைகள் பலி

திருவள்ளூர்: சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை பட்டறைபெருமந்துார் பகுதியில் நேற்று காலை சாலையில் படுத்திருந்த எருமை மாடுகள் மீது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் நான்கு எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே பலியானது. மூன்று எருமை மாடுகள் படுகாயமடைந்தன. காயமடைந்த மாடுகள் சீத்தஞ்சேரி கோசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் தாலுகா போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ