உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்

நெடுஞ்சாலையில் ஆபத்தான மரம் விபத்து அபாயத்தில் பகுதிவாசிகள்

திருவள்ளூர்: திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கூடப்பாக்கம். இப்பகுதியில் தினமும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் திருவள்ளூர் வழியாக திருப்பதி மற்றும் ஆந்திர மாநிலத்திற்கு சென்று வருகின்றன. இங்கு அரசு பள்ளி எதிரே திருமழிசை செல்லும் வழியில் குடியிருப்பு பகுதியில் நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள மரம் சாலையில் சாய்ந்த நிலையில் உள்ளது. இதனால் இந்த சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர். சாய்ந்த நிலையில் உள்ள மரத்தை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது வாகன ஓட்டிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஏதேனும் அசம்பாவிதம் நிகழும் முன், நெடுஞ்சாலையில் அபாய நிலையில் உள்ள மரத்தை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை