பெரியகளக்காட்டூரில் பகலில் எரியும் மின்விளக்கு
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்டது பெரியகளக்காட்டூர் ஊராட்சி. இந்த ஊராட்சிக்குட்பட்ட தக்கோலம் நெடுஞ்சாலை பகுதியில், சாலையோரம் உள்ள விளக்குகள், பகல் நேரங்களிலும் எரிகிறது.குறிப்பாக, பெரியகளக்காட்டூர் பிரதான சாலை, அரசு பள்ளி செல்லும் சாலை உட்பட பல இடங்களில், சாலையோரம் உள்ள மின் விளக்குகள் தொடர்ந்து எரிகின்றன.இதனால் மின்சாரம் வீணாவதோடு, மக்களின் வரிப்பணமும் வீணாகி வருவதாக அப்பகுதிவாசிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.எனவே, பகல் நேரங்களில் மின்விளக்குகள் எரிவதை தடுக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.