உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / உயர்கோபுர மின்விளக்கு பராமரிக்க தோண்டிய பள்ளத்தில் குப்பை குவியல்

உயர்கோபுர மின்விளக்கு பராமரிக்க தோண்டிய பள்ளத்தில் குப்பை குவியல்

திருவள்ளூர், திருவள்ளூர் காமராஜர் சிலை அருகில் உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தை பராமரிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாததால், குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது.திருவள்ளூர் நகரின் பிரதான சாலையாக ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளது. சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும் இச்சாலையை பயன்படுத்தி வருகின்றன.இரண்டு சாலை சந்திக்கும் இடமாக காமராஜர் சிலை உள்ளது. இந்த இடத்தில், நகராட்சி சார்பில் உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டு உள்ளது.இந்த உயர்கோபுர மின்விளக்கை பராமரிக்க, கடந்த சில வாரங்களுக்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. தோண்டிய பள்ளத்தை மூடாததால், உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி உள்ளது.மேலும், தோண்டப்பட்ட பள்ளத்தில், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. எனவே, மின்விளக்கு கம்பத்தை பராமரிக்க தோண்டப்பட்ட பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை