உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / துார்ந்து போன மழைநீர் கால்வாய் துார்வார வேண்டுகோள்

துார்ந்து போன மழைநீர் கால்வாய் துார்வார வேண்டுகோள்

திருவள்ளூர்:துார்ந்து போன மழைநீர் கால்வாயை துார் வாரி சீரமைக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் நகரத்தில், பெரும்பாக்கம், தலக்காஞ்சேரி, பூண்டி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் உள்ளன. மழை காலத்தில் பெய்யும் மழைநீரால், ஏரி, குளங்கள் நிரம்பி, பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்பாக உள்ளது. இந்த நிலையில், சமீப காலமாக, பொதுப்பணித் துறையினர் ஏரி வரத்து கால்வாய்களை சீரமைப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர்.திருப்பாச்சூர் பகுதியில் இருந்து வரும் மழைநீர் வடிகால்வாய், திருவள்ளூர்-ஊத்துக்கோட்டை சாலையை கடந்து, ஐ.சி.எம்.ஆர்., வழியாக, பெரும்பாக்கம் ஏரியை சென்றடைந்து வந்தது.தற்போது, சாலை அகலப்படுத்தும் பணி, கடந்த சில மாதங்களுக்கு முன் முதல்வர் வருகைக்காக என பல்வேறு காரணங்களால், இந்த வழித்தடம் மூடப்பட்டது.இதனால், மழை நீர் ஐ.சி.எம்.ஆர்., அலுவலக சுற்றுச்சுவர் அருகில் தேங்கி, கழிவு நீராக மாறி விட்டது. தற்போது கோடை மழை பெய்து வரும் நிலையில், இங்கு மேலும் தண்ணீர் தேங்கி உள்ளது. பொதுப்பணித்துறையினர் முன்னெச்சரிக்கையாக இந்த கால்வாயை துார் வாரி சீரமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ