உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / காவேரிராஜபுரம் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

காவேரிராஜபுரம் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க கோரிக்கை

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம், காவேரிராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட காலனி, கிராமம், அருந்ததியர் காலனி உள்ளிட்ட கிராமங்களில் 80,000 த்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இப்பகுதியை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்ப விழாக்களை திருவாலங்காடு, கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் 20- - 30 ஆயிரம் ரூபாய் செலவழித்து நடத்தி வருகின்றனர். இதனால், பகுதிவாசிகளுக்கு செலவு அதிகரிப்பதோடு, நேரம் வீணாகிறது.எனவே மக்களின் செலவை குறைக்கவும், வீண் அலைச்சலை தவிர்க்கவும் ஒன்றிய நிர்வாகம் காவேரிராஜபுரம் ஊராட்சியில் சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை