உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தடுப்பு இல்லாத கால்வாய் புதராக மாறிய அவலம்

தடுப்பு இல்லாத கால்வாய் புதராக மாறிய அவலம்

திருவள்ளூர்:திருவள்ளூர் ரயில் நிலையம், பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ, எல்.ஐ.சி., பகுதிகளில், 2,000த்துக்கும் மேற்பட்ட வீடுகள், நான்கு திருமண மண்டபங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மழைநீர் செல்வதற்காக, பொதுப்பணி துறை சார்பில் கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த கால்வாய் பெரியகுப்பம், அய்யனார் அவென்யூ பிரதான சாலை வழியாக, ஜே.என்.சாலையை கடக்கிறது. அங்கிருந்து, அரசு மருத்துவமனை, வி.எம்.நகர் வழியாக காக்களூர் ஏரிக்கு செல்கிறது.ஜே.என்.சாலையில் இருந்து அய்யனார் அவென்யூ பிரதான சாலையை ஒட்டி அமைந்துள்ள இந்த கால்வாயில் தடுப்புச்சுவர் இல்லை. இதனால், அவ்வப்போது வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கழிவுநீர் கால்வாயில் விழுந்து விடுகின்றனர்.மேலும், கனரக வாகனங்கள் செல்லும் போது, நடந்து செல்வோரும் கால்வாயில் விழும் அபாயம் உள்ளது. கால்வாய் முழுதும் நாணல் புல் வளர்ந்து, புதராக மாறி வருகிறது. இதனால், கால்வாய் துார்ந்து, மழைநீர் செல்வது தடைபடும் நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, பொதுப்பணித் துறையினர், இக்கால்வாயை துார் வாரி, தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்