உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / இரு பல்நோக்கு கட்டடங்கள் நிறுவ ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

இரு பல்நோக்கு கட்டடங்கள் நிறுவ ரூ.20 லட்சம் ஒதுக்கீடு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சட்டசபை தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, கும்மிடிப்பூண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இரு இடங்களில் பல்நோக்கு கட்டடங்கள் நிறுவ, 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. அதன்படி, 15வது வார்டுக்கு உட்பட்ட கோரிமேடு, 4வது வார்டுக்கு உட்பட்ட கோட்டக்கரை ஆகிய இரு பகுதிகளில் தலா, 10 லட்சம் ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடங்கள் நிறுவப்பட இருக்கின்றன. அதன் கட்டுமான பணிகளுக்கான ஆய்வறிக்கை, வரைபடம், நிர்வாக அனுமதி, மதிப்பீடு ஆகியவை, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தயார் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ