தொழிற்சாலை விபத்தில் மேலும் ஒருவர் பலி
கும்மிடிப்பூண்டி:புதுகும்மிடிப்பூண்டி கிராமத்தில் உள்ள தனியார் இரும்பு உருக்கு தொழிற்சாலையில், இம்மாதம், 10ம் தேதி, கொதிகலனில் இருந்து சூடான இரும்பு தீக்குழம்பு சிதறியது.அங்கு பணியில் இருந்து ஆறு பேர் மீது தீக்குழம்பு தெறித்தது. பலத்த தீக்காயம் அடைந்த ஐந்து பேர், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.அவர்களில், உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சாகில், 22, என்பவர் இறந்த நிலையில், மற்றொரு தொழிலாளியான, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த நரேந்தர்குமார் மன்ஜி, 27, என்பவர், நேற்று உயிரிழந்தார்.