மேலும் செய்திகள்
பயணியர் நிழற்கூரை போஸ்டரால் அலங்கோலம்
07-Sep-2024
கனகம்மாசத்திரம்:சென்னை --- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் அடுத்து அமைந்துள்ளது கனகம்மாசத்திரம் கிராமம். இப்பகுதிவாசிகள் சென்னை, திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள பயணியர் நிழற்குடையை பயன்படுத்தி வருகின்றனர்.கடந்தாண்டு மறுசீரமைக்கப்பட்ட இந்த நிழற்குடையில், பயணியர் இயற்கை உபாதையை கழிக்க பயோ டாய்லெட் அமைக்கப்பட்டது. தற்போது, இந்த பயோ டாய்லெட் பயன்பாடின்றி கதவுகள் உடைந்து பாழடைந்த நிலையில் காட்சியளிக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான பயணியர் சென்று வரும் இப்பேருந்து நிறுத்தத்தில் கழிப்பறை சேதமடைந்து உள்ளதால், பயணியர் பல்வேறு சிரமங்களை அனுபவித்து வருவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே, பயோ டாய்லெட்டை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பயணியர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
07-Sep-2024