உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சகோதரர்களை தாக்கி கொலை மிரட்டல்

சகோதரர்களை தாக்கி கொலை மிரட்டல்

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சி சூசைபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சூசைராஜ் மனைவி கிரேஸ்மேரி, 45.கடந்த 28ம் தேதி இவரது மகன்கள் அரவிந்த், 23 மற்றும் லியோஜோசப், 26 ஆகிய இருவரும் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு டாடா ஏஸ் வாகனத்தை ஓட்டி வந்த அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ், 25 என்ற நபர் சகோதரர்கள் மீது மோதுவது போல் வந்துள்ளார்.இதை சகோதரர்கள் தட்டி கேட்ட போது விமல்ராஜ் மற்றும் அவருடன் வந்த ராஜேந்திரன், 42, சஞ்சய், 22, சக்திவவேல், 35 ஆகியோருடன் சேர்ந்து இருவரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றனர். இதுகுறித்து கிரேஸ்மேரி கொடுத்த புகாரின்படி மப்பேடு போலீசார் நால்வர் மீதும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











புதிய வீடியோ