உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை

விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க தடை

திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்துவது குறித்து ஆலோசனை கூட்டம், கோட்டாட்சியர் தீபா தலைமையில் நேற்று நடந்தது. திருத்தணி டி.எஸ்.பி., கந்தன் முன்னிலை வகித்தார்.கோட்டாட்சியர் தீபா பேசியதாவது:தமிழக அரசின் மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தலின் படி, விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலத்தின் போது ரசாயன வண்ண கலவைகள் பூசப்பட்ட சிலைகளை பயன்படுத்த கூடாது. களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் வைத்து வழிபட வேண்டும். பொது இடத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், 7 நாட்களுக்குள் அரசால் அறிவிக்கப்பட்ட நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். ஊர்வல வாகனத்தில் ஒலிப்பெருக்கி வைக்கக் கூடாது.பட்டாசு வெடிக்கவோ, பெரிய அளவிலான கொடிகள், பேனர்களை எடுத்து செல்லவோ கூடாது.விநாயகர் சிலைகள் அமைக்கும் இடங்களில் மாற்று மதத்தினரின் வழிபாட்டு தலங்கள், கல்விச்சாலைகள், மருத்துவமனைகள் அருகில் இருக்க கூடாது.சிலைகள் வைக்கப்படும் இடத்தில் தீ விபத்துகளை தடுக்க அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். இந்த நிபந்தனைகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்ககை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை