உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்

3 வது முறையாக பேனர் கிழிப்பு: பா.ஜ., நிர்வாகி போலீசில் புகார்

திருவாலங்காடு:பிரதமராக மோடி பதவியேற்றதை ஒட்டி திருவாலங்காடு ஒன்றிய பா.ஜ., சார்பில் அவரை வாழ்த்தி திருவாலங்காடு தேரடியில் நேற்று முன்தினம் இரவு பேனர் வைக்கப்பட்டது. விதிமுறைக்கு உட்பட்டு அனுமதியோடு வைக்கப்பட்ட இந்த பேனரை இரவில் மர்ம நபர்கள் கிழித்துள்ளதாக ஒன்றிய தலைவர் பாண்டுரங்கன் போலீசில் புகார் அளித்தார்.இதுகுறித்து பா.ஜ., ஒன்றிய நிர்வாகிகள் கூறுகையில், 'அனுமதியுடன் பேனர் வைக்கிறோம் ஆனால் மர்ம நபர்கள் கிழித்து விடுகின்றனர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பேனர் கிழிக்கப்பட்டு உள்ளது.போலீசாரிடம் புகார் அளித்தும் நடவடிக்கையில்லை. ஒருதலைப்பட்சமாக செயல்படுகின்றனர். இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை