மதுபோதை வாலிபர் மீது சரமாரி தாக்கு
மணலி:மணலி, பாடசாலை தெருவில், நேற்று நான்கு வாலிபர்கள் நின்றிருந்தனர். அப்போது, மதுபோதையில் வந்த, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 20, என்பவர் வாலிபர்களிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஆத்திரமடைந்த நான்கு பேரும் சேர்ந்து மணிகண்டனை கையால் தாக்கினர். உடனே, வீட்டில் இருந்து கத்தியை எடுத்து வந்து மணிகண்டன் தாக்க முற்பட்டார்.அவரை மடக்கிய வாலிபர்கள், கத்தியை பிடுங்கி அவரது தலையில் வெட்டினர். அக்கம்பக்கத்தினர் மணிகண்டனை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.மணலி போலீசார் சம்பவத்தில் ஈடுபட்ட, ஆகாஷ்,18, சந்தோஷ், 19, காமேஷ், 19, வம்சி, 19, ஆகியோரை தேடி வருகின்றனர்.