உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூவை பார்வையற்றோர் பள்ளியில் தொட்டு உணரக்கூடிய நடைபாதை..

பூவை பார்வையற்றோர் பள்ளியில் தொட்டு உணரக்கூடிய நடைபாதை..

பூந்தமல்லி: பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தொட்டு உணரக்கூடிய நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.சென்னை அருகே பூந்தமல்லி, கரையான்சாவடியில், தமிழக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ், பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப் பள்ளி இயங்குகிறது.இங்கு, ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை, 106 மாணவர்கள் படித்து வருகின்றனர்.'புக் பைண்டிங்' பாடப் பிரிவில் 22 மற்றும் தொழிற்பிரிவில் 24 பார்வையற்ற மாணவர்களும் பயில்கின்றனர். மேலும், இங்குள்ள பார்வையற்றோர் மறுவாழ்வு இல்லத்தில், 11 பேர் தங்கியுள்ளனர்.இந்நிலையில், இங்குள்ள பார்வையற்ற மாணவர்கள் எளிதாக பள்ளி வளாகம், அலுவலகம், உணவகம், கழிப்பறை ஆகிய இடங்களுக்குச் செல்லும் வழிகளில், தொட்டு உணரக்கூடிய நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.பார்வையற்றோர் தங்கள் பாதங்களை கொண்டு தொட்டு உணர்ந்து, எளிதாக சரியான இடத்திற்குச் செல்ல முடியும் என்பதால், இந்த நடைபாதை பார்வையற்ற மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை