உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பேருந்துகள் செல்லவிடாமல் இடையூறு செய்யும் கால்நடைகள்

பேருந்துகள் செல்லவிடாமல் இடையூறு செய்யும் கால்நடைகள்

திருவள்ளூர்:திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த, கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலானோர் கால்நடைகளை சாலையில் திரிய விடுகின்றனர். குறிப்பாக, திருவள்ளூர் - ஊத்துக்கோட்டை சாலையில் உள்ள சிறுவானுார் கண்டிகை, புல்லரம்பாக்கம், பூதுார், சதுரங்கப்பேட்டை, பூண்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்தோர் அதிகளவில் கால்நடை வளர்த்து வருகின்றனர்.இதை காலையில் மேய்ச்சலுக்காக அழைத்துச் செல்லும்போது, சாலையின் குறுக்கே மாடுகள் கூட்டம், கூட்டமாக செல்கிறது. அவ்வப்போது அவ்வழியாக வரும் பேருந்துகள், கார், இருசக்கர வாகனம் உள்ளிட்ட கனரக வாகனங்களை மறித்து நின்று விடுகின்றன.இதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. மேலும், வேகமாக வரும் வாகனங்கள் கால்நடைகளால் விபத்திற்கு உள்ளாகி பலரும் இறந்து விடுகின்றனர்; பலர் காயமடைந்து விடுகின்றனர். சாலையில் கால்நடைகளை திரியவிட்டால், அவற்றின் உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிப்பதுடன், கால்நடைகளும் பறிமுதல் செய்யப்படும் என, கலெக்டர் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், கால்நடை உரிமையாளர்கள் கலெக்டர் உத்தரவை மதிப்பதில்லை. நேற்று முன்தினம் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூர் வந்த அரசு பேருந்தையும் பிற வாகனங்களையும் சிறை பிடிப்பது போல் மாடுகள் வழிமறித்து நின்றன. இதனால், கால் மணி நேரத்திற்கு மேல், அரசு பேருந்து செல்ல முடியாமல், பயணியர் மற்றும் பொதுமக்கள் பரிதவித்தனர்.எனவே, சாலையில் கால்நடைகளை திரிய விடுவோர் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சாலையில் மாடுகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மக்களின் முக்கிய தொழில் விவசாயம். மேலும், கால்நடைகளும் வளர்க்கின்றனர். ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் மாநில நெடுஞ்சாலையில், ஊத்துக்கோட்டை, போந்தவாக்கம், கச்சூர், சீத்தஞ்சேரி, ஒதப்பை, பூண்டி, சதுரங்கப்பேட்டை உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.ஊத்துக்கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட தலைநகரான திருவள்ளூர் செல்ல, மேற்கண்ட மாநில நெடுஞ்சாலையை பயன்படுத்துகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்களில் சிலர் மாடுகளை வளர்க்கின்றனர். அவர்கள் மாடுகளை வீடுகளில் கட்டி தீனி போட்டு வளர்ப்பதில்லை. சாலையில் திரிய விடுகின்றனர்.அவை சாலைகளில் உள்ள பொருட்களை தின்று திரிகின்றன. காலை, மாலை வேளைகளில் மாடுகளை வளர்ப்போர் பால் கறந்து விட்டு, சாலையில் திரிய விடுகின்றனர். மாடுகள் சாலையில் ஓய்வெடுக்கும் போது வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர்.இதுகுறித்து உள்ளாட்சி அமைப்புகள், தாசில்தார் வரை அதிகாரிகளிடம் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, பெரிய அளவில் விபத்து ஏற்படும் முன், மாவட்ட கலெக்டர் சாலையில் திரியும் மாடுகளின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி