உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கோவிட் பரிசோதனை அரங்கு உருக்குலைந்து கவலைக்கிடம்

கோவிட் பரிசோதனை அரங்கு உருக்குலைந்து கவலைக்கிடம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தை ஒட்டி, வட்டார கல்வி அலுவலகம், ஒருங்கிணைந்து குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம், எஸ்.எஸ்.ஏ., வட்டார வள மையம் உள்ளிட்டவை அமைந்துள்ளது.இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட நடமாடும் கோவிட் பரிசோதனை மைய அரங்கு, இந்த வளாகத்தில் சாலையோரம் போடப்பட்டுள்ளது.இந்த அரங்கின் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உருக்குலைந்துள்ளன. இதனால், எந்த நேரமும் சாய்ந்து விழும் நிலையில் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.தினசரி பல்வேறு பணிகள் காரணமாக, ஆசிரியர்கள், உள்ளாட்சி உறுப்பினர்கள், அங்கன்வாடி மைய ஊழியர்கள் என, பல்வேறு தரப்பினரும் இங்கு வந்து செல்கின்றனர்.எனவே, சிதைந்து சாய்ந்து விழும் நிலையில் உள்ள இந்த பரிசோதனை அரங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ