உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பராமரிப்பின்றி புதராக மாறிய கலெக்டர் அலுவலக வளாகம்

பராமரிப்பின்றி புதராக மாறிய கலெக்டர் அலுவலக வளாகம்

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகம் முறையான பராமரிப்பு இல்லாததால், புதராக மாறியுள்ளது.திருவள்ளூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், கலெக்டர் அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட வருவாய் அலுவலகம், சமூக நலத்துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்ளிட்ட, அனைத்து மாவட்ட அளவிலான தலைமை அலுவலகங்கள்; கலெக்டர், டி.ஆர்.ஓ., கூடுதல் கலெக்டர், எஸ்.பி., குடியிருப்புகளும், வனத்துறை, மாவட்ட விருந்தினர் மாளிகை உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. பெருந்திட்ட வளாகத்திலும், கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும் ஏராளமான மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன. இந்த மரங்களை அவ்வப்போது பொதுப்பணித் துறையினர் பராமரிக்காமல் அலட்சியமாக உள்ளதால், கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும், செடிகள் வளர்ந்து புதராக காட்சியளிக்கிறது. கட்டடத்தைச் சுற்றிலும் புதர்கள் மண்டியிருப்பதால், அவற்றில் இருந்து பல்வேறு விஷப்பூச்சிகளும், தேனீக்களும் அலுவலகத்திற்குள் புகுந்து, ஊழியர்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. எனவே, கலெக்டர் அலுவலகத்தைச் சுற்றிலும், அரசுத்துறை அலுவலகங்களை ஒட்டியுள்ள பகுதியில் வளர்ந்து முட்செடிகள், புற்களை வெட்டி சுத்தம் செய்ய வேண்டும் என, ஊழியர்கள் கலெக்டருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி