உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கான்கிரீட் பெயர்ந்த அரசு அலுவலகம்

கான்கிரீட் பெயர்ந்த அரசு அலுவலகம்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம், ராமசமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்டவை ராமசமுத்திரம், ராமசமுத்திரம் காலனி, சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகள்.இதில், ராமசமுத்திரம் கிராமத்தின் கிழக்கில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வந்தது.இந்த கட்டடம் பழுதடைந்துள்ள நிலையில், வேறு பகுதியில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பழைய கட்டடம், தளத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுகிறது.குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள இந்த கட்டடத்தை ஒட்டி கிராம நிர்வாக அலுவலகம் இயங்கி வருகிறது. பகுதிவாசிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வரும் நபர்கள், கான்கிரீட் பெயர்ந்து வரும் ஊராட்சி அலுவலக பழைய கட்டடத்தை கடந்து செல்ல வேண்டி உள்ளது.இதனால், விபத்து அச்சத்தில் தவித்து வருகின்றனர். இந்த கட்டடத்தை பாதுகாப்பாக இடித்து அகற்ற வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை