| ADDED : ஜூலை 12, 2024 08:03 PM
திருத்தணி:திருத்தணி அடுத்த பெரியகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரபாகரன், 40. இவர், திருத்தணி—அரக்கோணம் மாநில நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஷிப்ட் வேலைக்கு சென்று நேற்று காலை, 7:00 மணிக்கு வீட்டிற்கு வந்தார். மதியம், 12:00 மணிக்கு ராம்பிரபாகரன், அவரது மனைவி அஸ்வினி, 33 ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் திருத்தணி சென்றனர்.அப்போது கசவராஜப்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலையோரம் இருந்த ரியல் எஸ்டேட் விளம்பர பலகையின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கணவன், மனைவ பலத்த காயம் அடைந்தனர். அவ்வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.