உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பக்தர்கள் புகார் எதிரொலி இணை ஆணையர் ஆய்வு

பக்தர்கள் புகார் எதிரொலி இணை ஆணையர் ஆய்வு

திருத்தணி:திருத்தணி முருகன் கோவிலுக்கு, மொத்தம் 29 உபகோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் அனைத்தும் முருகன் கோவில் இணை ஆணையர் ரமணி நிர்வாகம் செய்து வருகிறார்.கடந்த சில மாதங்களாக உபகோவில்களில் பணிபுரியும் ஊழியர்கள் சரியாக வேலைக்கு வராமல், பக்தர்களிடம் கணிவாக பதில் கூறாமல், அலட்சியத்துடன் செயல்படுவதாக, தொடர்ந்து பக்தர்கள், இணை ஆணையரிடம் புகார் தெரிவித்து வந்தனர்.கடந்த மாதம் நெடும்பரம் கோதண்டராமர் கோவிலில் இணை ஆணையர் திடீரென ஆய்வு செய்த போது, அங்கு கோவில் ஊழியர் பணியில் இல்லாமல் இருந்ததை கண்டுபிடித்து, அந்த ஊழியரை 'சஸ்பெண்ட்' செய்தார்.நேற்று முன்தினம் திருத்தணி நந்தி ஆற்றின் கரையோரம் உள்ள ஆறுமுக சுவாமி கோவிலில் பணிபுரிந்த ஊழியர் ஒருவர், தரிசனம் செய்த பக்தர்களை தரக்குறைவாக பேசியும், தரிசனம் நேரம் முடித்துவிட்டது வெளியே செல்லுங்கள் என, ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.இதுகுறித்து இணை ஆணையரிடம் பாதிக்கப்பட்ட பக்தர்கள் மனு அளித்தனர். இந்நிலையில், நேற்று காலை திடீரென இணை ஆணையர் ரமணி, ஆறுமுக சுவாமி கோவிலில் ஆய்வு செய்தார். பின், சம்பந்தப்பட்ட ஊழியரிடம் நேற்று முன்தினம் நடந்த சம்பவத்தை கேட்டறிந்தார்.மேலும், அங்கு பணிபுரியும் ஊழியர்களிடம், 'பக்தர்களிடம் கணிவாக நடந்து கொள்ள வேண்டும்' எனவும் அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை