உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 9 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்

9 வயது சிறுமியை கடித்து குதறிய நாய்

திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சி, பூஞ்சோலை நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் மகள் பிரித்திகா, 9. இவர், தக்கோலத்தில் உள்ள தனியார் பள்ளியில், நான்காம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 8:30 மணிக்கு, வீட்டருகே விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, எதிர் வீட்டில் சீனிவாசன் என்பவர் வளர்த்து வரும் நாட்டு நாய், சிறுமியை கடித்து குதறியது. இதை பார்த்த நாகராஜ், நாயிடம் இருந்து மகளை மீட்டார். தலையில் பலத்த காயமடைந்த சிறுமி, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு, தலையில் எட்டு தையல்கள் போடப்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து, திருவாலங்காடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை