மெதுார் அரசு பள்ளிகளில் குடிநீர் இயந்திரம் அமைப்பு
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மெதுாரில் உள்ள அரசு பள்ளிகளில், 'கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட்' திருப்பூர் கிளை சார்பில், 4.80 லட்சம் ரூபாய் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வந்தன.மெதுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் இரண்டு, துவக்கப் பள்ளியில் ஒன்று என, மூன்று இடங்களில், தலா, 500 லிட்டர் குடிநீரை சுத்திகரிக்கும் திறன் கொண்ட இயந்திரங்கள் மற்றும் அதற்கான கட்டமைப்புகள் அங்கு ஏற்படுத்தப்பட்டன.கட்டமைப்பு பணிகள் முடிந்த நிலையில், பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், கேன் பின் ஹோம்ஸ் லிமிடெட் திருப்பூர் கிளை மேலாளர் சிரஞ்சீவி முனிவேலு பங்கேற்று, அவற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பள்ளி நிர்வாகங்களிடம் ஒப்படைத்தார்.