மேலும் செய்திகள்
ரோப் கார் நுழைவாயிலில் கடைகள் ஆக்கிரமிப்பு
01-Aug-2024
பொதட்டூர்பேட்டை: பொதட்டூர்பேட்டையில் இருந்து பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், பொதட்டூர்பேட்டை காவல் நிலையம் எதிரே ஜம்புலிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சிவனடியார்கள் ஏராளமானோர் நித்திய வழிபாடு மற்றும் பிரதோஷம் உள்ளிட்ட பூஜைகளை நடத்தி வருகின்றனர். பிரதோஷ பூஜையின் போது, திரளான சிவனடியார்கள், சிவ பூத கண வாத்தியங்களை இசைப்பது இங்கு பிரபலம். சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இணைந்து இந்த பக்தி இசை நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர்.இந்த கோவில் வளாகத்திற்கு சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. ஆனால், கோவிலின் எதிரே, 50 மீட்டர் தொலைவில் பொதட்டூர்பேட்டை காவல்நிலையம் அமைந்து உள்ளது. இதனால், பாதுகாப்புக்கு எந்தவித குறைவும் இல்லை. ஆனால், அதையும் தாண்டி, மதுப்பிரியர்கள் கோவில் வளாகத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கோவில் வளாகத்தில் மதுப்பிரியர்கள் காலி மதுபாட்டில்களை வீசி செல்கின்றனர். கோவில் வளாகத்தில் மது அருந்துபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
01-Aug-2024