உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பூங்காவில் வணிக வளாகம் எதிர்த்து இ.கம்யூ., மனு

பூங்காவில் வணிக வளாகம் எதிர்த்து இ.கம்யூ., மனு

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட சி.வி.நாயுடு சாலை - நேதாஜி சாலை சந்திப்பில், ராஜாம்பாள் தேவி பூங்கா உள்ளது. இந்த பூங்கா, 60 ஆண்டுக்கும் மேலாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு, நடைபயிற்சி பாதையும் அமைக்கப்பட்டிருந்தது.இந்த பூங்காவில் நகராட்சி நிர்வாகம் கடைகள் கட்டி, வணிக வளாகமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக, திருவள்ளூர் இ.கம்யூ., கட்சியினர் கலெக்டருக்கு மனு அளித்துள்ளனர்.மனுவில் கூறியிருப்பதாவது:திருவள்ளூரைச் சேர்ந்த வெங்கடாசலபதி என்பவர், திருவள்ளூர் நகர வாசிகளின் பூங்கா பயன்பாட்டிற்காக, அவரது நிலத்தை நகராட்சி நிர்வாகத்திற்கு தானமாக ஒப்படைத்தார். அங்கு, அவரது மனைவி ராஜம்பாள் தேவி பெயரில் பூங்கா அமைக்க கேட்டுக் கொண்டார்.அதன்படி, நகராட்சியும் அங்கு பூங்கா அமைத்தது. தற்போது, பூங்காவிற்காக பெறப்பட்ட இடத்தில், வணிக வளாகம் கட்டும் பணியில் நகராட்சி நிர்வாகம் விதிமீறி ஈடுபட்டு வருகிறது. இதற்காக, எவ்வித தீர்மானமும் இன்றி, 50 ஆண்டு கால பழமையான மரங்களும் வெட்டி அகற்றப்பட்டு உள்ளன.எனவே, அந்த இடத்தை நேரில் ஆய்வு செய்து, வணிக வளாகம் கட்டும் பணியை தடுத்து நிறுத்த வேண்டும். விதிமீறிய நகராட்சி கமிஷனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை